திரை விமர்சனம்
கார்த்தி, அரவிந்த் சாமி கூட்டணி வெற்றியா.? அனல் பறக்கும் மெய்யழகன் ட்விட்டர் விமர்சனம்
கார்த்தி, அரவிந்த் சாமி கூட்டணி வெற்றியா.? அனல் பறக்கும் மெய்யழகன் ட்விட்டர் விமர்சனம்
கார்த்தியின் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ஜப்பான் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதை அடுத்து சிறு இடைவெளிக்கு பிறகு தற்போது உருவாகி இருக்கிறது.
96 பட இயக்குனர் இயக்கத்தில் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நாளை வெளியாக இருக்கும் இப்படத்தின் ப்ரமோஷன் கடந்த சில நாட்களாகவே அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் தற்போது இதன் பிரிவியூ ஷோவை பார்த்த சினிமா விமர்சகர்கள் தங்களுடைய விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதில் படம் ஃபீல் குட் கதை அம்சத்துடன் ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதாக அனைவரும் தெரிவித்துள்ளனர்.
அதிலும் அரவிந்த்சாமி இருவரின் காம்போ வேற லெவலில் உள்ளது. இயக்குனர் திரை கதையை கொண்டு சென்ற விதமும், இசையும், இடைவேளை காட்சியும் படத்திற்கு கூடுதல் பலம். கார்த்தியின் துறுதுறு நடிப்புடன் சேர்த்து காமெடி சென்டிமென்ட் காட்சிகள் அனைத்தும் கைத்தட்டலை பெறும்.
அதேபோல் அரவிந்த்சாமி முற்றிலும் வேறு மாதிரியான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 96 படம் எந்த அளவுக்கு உணர்வுபூர்வமாக இருந்ததோ அதேபோல் மெய்யழகனும் உறவுகளுக்கு இடையேயான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் கார்த்திக்கு இப்படம் நிச்சயம் ஒரு கம்பேக்காக இருக்கும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். ஆக மொத்தம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அளவுக்கு மெய்யழகன் பேரழகனாக இருக்கிறது.