இந்தியா
காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள இந்திய அரச மருத்துவர்கள் சங்கம்!
காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள இந்திய அரச மருத்துவர்கள் சங்கம்!
சென்னை கிண்டியிலுள்ள அரச மருத்துவமனையொன்றில் பணியாற்றிவந்த மருத்துவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை அரச மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் பாலாஜி ஜெகன்நாதன் என்ற மருத்துவர், தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி விக்னேஷ் என்ற இளைஞர் மருத்துவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த மருத்துவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரச மருத்துவமனை மருத்துவருக்கே பாதுகாப்பு இல்லாத ஓர் அவல நிலை உருவாகியுள்ளதைக் கண்டித்து தமிழக அரச மருத்துவர்கள் சங்கம் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
அந்தவகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரச மருத்துவக் கல்லூரிகளின் அவசரகால சிகிச்சை, மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்கள் , காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. (ச)