திரை விமர்சனம்

கொடுத்த பில்டப்புக்கு ஒர்த்தா இல்ல ஓவர் டோஸா.. சூர்யாவின் கங்குவா 2000 கோடியை தட்டுமா.? முழு விமர்சனம்

Published

on

கொடுத்த பில்டப்புக்கு ஒர்த்தா இல்ல ஓவர் டோஸா.. சூர்யாவின் கங்குவா 2000 கோடியை தட்டுமா.? முழு விமர்சனம்

நடிப்பில் இயக்கியிருக்கும் இன்று வெளியாகி இருக்கிறது. தயாரிப்பில் 350 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் பிரமோஷன் கடந்த சில வாரங்களாக பயங்கரமாக நடந்தது.

சூர்யா சென்னை, ஆந்திரா என பல இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து பிரமோஷன் செய்தார். அதிலும் தயாரிப்பாளர் கங்குவா 2000 கோடியை தட்டி தூக்கும் அடுத்த மாதம் சக்சஸ் மீட் நடைபெறும் என ஓவர் பில்டப் கொடுத்தார்.

Advertisement

அதேபோல் சூர்யா ரசிகர்களின் சோசியல் மீடியாவில் பயங்கர அலப்பறை செய்து வந்தனர். இத்தனை ஆரவாரங்களுக்கு மத்தியில் படம் அந்த அளவுக்கு ஒர்த்தா இல்லை ஓவர் டோஸா என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம்.

படம் நிகழ் காலத்தில் தான் ஆரம்பிக்கிறது. 2024 ரஷ்யாவில் பல சிறுவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதிலிருந்து தப்பித்து வரும் சிறுவன் திடீரென கோவாவுக்கு வருகிறான். அங்கு போலீசால் பிடிக்க முடியாத குற்றவாளிகளை கூட பிடித்துக் கொடுக்கும் வேலையை செய்கிறார் சூர்யா.

அவரிடம் வந்து சேரும் பையனை சூர்யா காப்பாற்றுகிறார். அதிலிருந்து பிளாஷ்பேக் விரிகிறது. அதில் ஐந்து தீவுகளில் ஐந்து விதமான மக்கள் வாழுகின்றனர். அதன் ஒரு தீவில் சூர்யாவும் மற்றொரு தீவில் பாபி தியோலும் முக்கிய தலையாக இருக்கின்றனர்.

Advertisement

அந்த சமயத்தில் இந்தியாவுக்கு வரும் ரோமானியர்கள் சூர்யா இருக்கும் தீவில் தங்கள் படைகளை அமைக்க விரும்புகின்றனர். அதைத்தொடர்ந்து நடக்கும் மோதல் இன மோதலாக மாறுகிறது.

அதில் சூர்யா, இருவரும் மோதுகின்றனர். இதில் யார் வெற்றி பெற்றது? நிகழ் காலத்தில் இருக்கும் சிறுவன் யார்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது கங்குவா. வழக்கமாக பல படங்களில் பார்த்த கதையாக இருந்தாலும் விஷுவல் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது.

அதிலும் சில சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தி வருகிறது. தமிழ் சினிமாவிற்கு இப்படி ஒரு படம் நிச்சயம் புதுசு தான். அதற்கேற்றார் போல் திரைக்கதை, இசை அனைத்தும் கூடுதல் சிறப்பாக உள்ளது.

Advertisement

இதில் சூர்யா தான் மொத்த படத்தையும் தாங்கி பிடித்து கர்ஜிக்கிறார். அதிலும் பிளாஷ்பேக்கில் வரும் கங்குவா வேற லெவல் மிரட்டல். அவருக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் சூர்யாவை ஓவர் டேக் செய்துவிடக்கூடாது என்பதற்காக பாபி தியோலை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. மேலும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் பக்காவாக இருக்கிறது. ஆனால் சென்டிமென்ட் கொஞ்சம் ஒட்டாத தன்மையுடன் உள்ளது.

இதையெல்லாம் தாண்டி படத்தை பார்க்கும் ஆடியன்ஸ் நிச்சயம் பிரம்மித்து போவார்கள். அந்த அளவுக்கு தியேட்டரில் படம் நல்ல ஒரு விஷுவல் அனுபவத்தை கொடுக்கும். அதே போல் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுத்துள்ளனர்.

Advertisement

அதில் தான் கார்த்தி வில்லனாக வருகிறார். இப்படி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கங்குவா சில இடங்களில் ஓவர் டோஸ் ஆக இருந்தாலும் மொத்தத்தில் கோலிவுட்டுக்கு பேர் சொல்லும் படம் தான்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version