இந்தியா

கொத்தாக இறக்கும் பறவைகள்!

Published

on

கொத்தாக இறக்கும் பறவைகள்!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் சாம்பார் ஏரியில் கடந்த மாதம் 26-ந் திகதியில் இருந்து பறவைகள் கூட்டம்கூட்டமாக இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 520 பறவைகள் செத்து மடிந்துள்ளன. இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இது குறித்து நடந்த ஆய்வில், ஒருவித பாக்டீரியாவால் பறவைகள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. கிளோஸ்ட்ரிடியம் போட்லினம் என்ற அந்த பாக்டீரியா தாக்கிய பறவைகளின் இறகு மற்றும் கால்கள் செயலிழந்து உயிரிழந்து வருகின்றன.

நோய் வாய்ப்பட்டுள்ள பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், பாக்டீரியா தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version