திரை விமர்சனம்

சமந்தா, வருண் தவான் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதா.? சிட்டாடல் ஹனி பன்னி விமர்சனம்

Published

on

சமந்தா, வருண் தவான் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதா.? சிட்டாடல் ஹனி பன்னி விமர்சனம்

ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ரூஸ்ஸோ பிரதர்ஸ் தயாரிப்பில் இன்று ஓடிடியில் வெளியாகி இருக்கிறது சிட்டாடல் ஹனி பன்னி. பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடிப்பில் வெளியான சிட்டாடலின் தொடர்ச்சியாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் மிகுந்த ஆர்வமுள்ள நடிகையான ஹனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரைப்பட ஸ்டண்ட் மேனாக பன்னி கதாபாத்திரத்தை ஏற்ற நடித்துள்ளார். சமந்தா மற்றும் வருண் தவான் இருவரும் ரகசியங்கள் நிறைந்த உலகத்தில் பயணிக்கும் போது பல துரோகங்களை பின் தொடர்கிறார்கள்.

Advertisement

தங்களது மகளை பாதுகாக்க முடிந்த அளவுக்கு அனைத்தையும் செய்ய போராடும்போது பல வன்முறைகளை சந்திக்க ஏற்படுகிறது. இவர்கள் வெற்றி பெற்றார்களா என்பது தான் சிட்டால் ஹனி பன்னி. இதில் வருண் தவான் மற்றும் சமந்தா இருவரும் தனது சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்து உள்ளனர்‌. இயக்குனர் சில இடத்தில் மந்தமாகக் கொண்டு சென்றுள்ளதால் சில சமயங்களில் அலுப்பு தட்டுகிறது. மேலும் அடுத்து என்ன நடக்கிறது என்பது யூகிக்கக்கூடியதாகவே இருப்பதால் பெரிய சஸ்பென்ஸ் எதுவும் இல்லை.

ஆனால் முதல் பாதி மிகவும் அற்புதமாக அமைந்திருந்தது. சமந்தா தனது 37 வயதில் இவ்வாறு துணிச்சல் மிக்க அழுத்தமான கதாபாத்திரம் மற்றும் வசீகரத்துடன் இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். மேலும் சமந்தா மற்றும் வருண் தவானுக்கு பெரிய அளவில் ரொமான்ஸ் காட்சிகள் வைக்கவில்லை.

Advertisement

ஆனாலும் சமந்தா நடிப்புக்காகவே இந்த சிரீஸை அமேசான் பிரைமில் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். இதன் மூலம் ஒரு தரமான கம்பேக் சமந்தா கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பாலிவுட்டில் சிறந்த நடிகர் வருண் தவான் என்பதை நிரூபித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version