திரை விமர்சனம்

சொர்க்கத்தில் மண்டியிடனுமா நரகத்திற்கு ராஜாவாகனுமா.? ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் விமர்சனம்

Published

on

சொர்க்கத்தில் மண்டியிடனுமா நரகத்திற்கு ராஜாவாகனுமா.? ஆர் ஜே பாலாஜியின் சொர்க்கவாசல் விமர்சனம்

புதுமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் என பலர் நடித்திருக்கும் இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ட்ரெய்லர் கவனம் பெற்ற நிலையில் படம் எப்படி இருக்கிறது என ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

1999 இல் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் காவல் அதிகாரி கொல்லப்படுகிறார். இதற்கு காரணம் பிரபல ரவுடி பாக்சர் வடிவேலுவின் மரணம் அதை அடுத்து நடந்த தாக்குதலில் போலீஸ் சிறை கைதிகள் என பலர் மரணம் அடைந்தனர்.

Advertisement

அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் சொர்க்கவாசல் படம் உருவாகி இருக்கிறது. செய்யாத கொலை குற்றத்திற்காக ஆர் ஜே பாலாஜி சிறைக்கு செல்கிறார். அங்கு ரௌடியாக இருக்கும் செல்வராகவன் திருந்தி வாழும் முயற்சியில் இருக்கிறார்.

அப்போது நிகழும் ஒரு மரணம் பெரும் வன்முறையாக வெடிக்கிறது. அதில் பல உயிர் பலியாகிறது. அதை விசாரிக்க வரும் நட்டி நட்ராஜ் கண்டுபிடித்தது என்ன? உண்மையில் இந்த கலவரம் எதற்காக நடந்தது? யார் காரணம்? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இப்படம்.

புதுமுகமாக இருந்தாலும் திரைக்கதையில் சில இடங்களை தவிர்த்து சிறப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். அதேபோல் ஆர் ஜே பாலாஜிக்கு இறுக்கமான கதாபாத்திரம். அதை அவர் திறமையாக கையாண்டு உள்ளார்.

Advertisement

அதேபோல் செல்வராகவனின் டான் கதாபாத்திரமும் வலுவாக இருக்கிறது. ஆனால் அவர் அதில் பொருந்துவதற்கு கொஞ்சம் தடுமாறி இருக்கிறார். நாமும் அப்படி ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் அவரை பொருத்த முடியாமல் சிரமப்படும் நிலைதான்.

இதில் இயக்குனர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இதை தவிர்த்து கருணாஸ் கதாபாத்திரமும் கவனம் பெறுகிறது. சமீபத்தில் வெளிவந்த போகும் இடம் வெகு தூரமில்லை படத்திலும் இவருடைய கதாபாத்திரம் பாராட்டுகளை பெற்றது.

தொடர்ந்து இது போன்ற நல்ல கதாபாத்திரங்களை அவர் தேர்ந்தெடுத்து நடிப்பதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதை அடுத்து படத்தில் இருக்கும் வசனங்கள் அதிக கவனம் பெறுகிறது. முதல் பாதி தடுமாற்றமாக இருந்தாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்பு கூடி ஆடியன்ஸை கட்டி போடுகிறது.

Advertisement

அதற்கு படத்தின் இசையும் ஒளிப்பதிவும் உறுதுணையாக இருக்கிறது. இப்படியாக 25 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை கதையை சுவாரஸ்யம் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர். அதனால் இந்த சொர்க்க வாசலை தாராளமாக ஒருமுறை காணலாம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version