திரை விமர்சனம்

ஜப்பான் திரைப்பட விமர்சனம்.

Published

on

ஜப்பான் திரைப்பட விமர்சனம்.

 

ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமை கொண்ட நடிகர் கார்த்தி, இந்த படத்தில் எப்படி நடித்திப்பார் என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அது  மட்டும் இல்லாமல், இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

Advertisement

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கதைக்களம் : 

கோவையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு பிரபல திருடன் ஜப்பானை (கார்த்தி) போலீசார் சந்தேகிக்கின்றனர். உள்துறை அமைச்சருக்கு (கே.எஸ். ரவிக்குமார்) கொள்ளை அடிக்கப்பட்ட நகை கடைக்கும் பங்கு இருப்பதால், இந்த கொள்ளை சம்பவத்தை கண்டறிய ஒரு குழுவை அமைக்கிறார்.

Advertisement

பல திருட்டுகளில் ஈடுபட்ட அவர், இந்த திருட்டையும் அவர் தான் நடித்திருப்பார் என்று தீவிரமாக தேட, ஒரு கட்டத்தில் சிக்கி கொள்கிறார். பின்னர், ஜப்பான் (கார்த்தி) தான் இந்த நகைகளை திருடவில்லை என்று போலீசாரிடம் எடுத்துரைக்கிறார். இது வேற ஒருவர் செய்திருக்கலாம் என போலீசாருக்கு ஜப்பான் (கார்த்தி) ஒரு குழு கொடுக்க, இந்த கொள்ளையை யார் தான் நடித்திருப்பார்.

ஒரு வேலை இந்த கொள்ளையை இவர் தான் நடத்திருப்பாரா, இல்லை வேற யாருமா? என்ற கோணத்தில் கதை நகர, போலீசார் பிடியில் இருந்து இறுதியில் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் படத்தின் மீதமுள்ள கதை.

படத்தின் முதல் பாதி ஆக்சன் காட்சிகளுடன் சென்றாலும், 2வது பாதி முழுக்க எமோஷனலாகவும் செல்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மட்டும் சற்று தொய்வை ஏற்படுத்தி இருந்தாலும், மற்றபடி குறையில்லை. அதிலும் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள் பக்காவாக இருந்தது என்றே சொல்லாம்.

Advertisement

கார்த்தி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கட்சிதமாக நடித்து முடித்துள்ளார். பதில் போலீஸ் அதிகாரிகளாக வரும் விஜய் மில்டன் மற்றும் சுனில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் தொடக்கத்தில் அவரது நகைச்சுவையான டைமிங் சிரிப்பை வரவைக்கிறது. நடிகர் சுனிலும் போதுமான அளவில் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடஙகிய கதை, பலவீனமான திரைக்கதையுடன் மந்தமான நிலையை ஏற்படுத்தியது. ராஜு முருகன் கூடுதல் திரைக்கதையை உருவாக்கியிருக்கலாம், அப்படி செய்திருந்தால் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்.

Advertisement

அனு இம்மானுவேல் படத்திற்கு கொஞ்சம் கூட திரைக்கதைக்கு முக்கியதுவம் இல்லாமல், படத்தில் அவர் 10 நிமிடங்களுக்கு மேல் தோன்றவில்லை. அது மட்டும் இல்லாமல், கார்த்தி உடனான அவரது காட்சிகள் கூட ஈர்க்கவில்லை.

சொல்ல போனால், படத்தில் அழுத்தமான கதை மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் இல்லை என்றே சொல்ல வேண்டும். திரைப்படம் பல அதிரடி காட்சிகளைக் கொண்டிருந்தாலும், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பாக அமையவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version