திரை விமர்சனம்
தடையை மீறிய காட்சிகள், நயன்தாராவின் காதல் காவியம்.. Nayanthara Beyond The Fairytale ஆவணப்பட விமர்சனம்
தடையை மீறிய காட்சிகள், நயன்தாராவின் காதல் காவியம்.. Nayanthara Beyond The Fairytale ஆவணப்பட விமர்சனம்
இயக்குனர் விக்னேஷ் சிவனை படப்பிடிப்பின் போது காதலிக்க தொடங்கிய சில வருடங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார். கோலகாலமாக நடைபெற்ற அந்த திருமணத்தில் மிக சில பிரபலங்களுக்கு தான் அழைப்பு சென்றது.
போட்டோக்கள் கூட வெளியில் கசிந்து விடாதபடி பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் திருமணம் நடந்தது. அதை அடுத்து அந்த வீடியோ நெட்பிலிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்டது என்ற செய்தியும் பரவியது. ஆனால் இரண்டு வருட தாமதத்திற்கு பிறகு தற்போது அது Nayanthara Beyond The Fairytale ஆவணப்படமாக வெளியாகி உள்ளது.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ள அந்த ஆவணப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு காண்போம். அதற்கு முன்னதாக இந்த ஆவண படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அதில் நானும் ரவுடிதான் படத்தின் மூன்று வினாடி காட்சிகள் இருந்தது.
அதை எதிர்த்து நோட்டீஸ் அனுப்பியதோடு 10 கோடி நஷ்ட ஈடும் கேட்டிருந்தார். அதை நயன்தாரா மூன்று பக்க அறிக்கையில் வெளியிட்டதோடு தனுஷை சரமாரியாக குற்றம் சாட்டி இருந்தார். இதனால் பெரும் பரபரப்பு கிளம்பியதை அடுத்து இன்று வெளியான ஆவணப்படத்தில் 20 வினாடிகளுக்கும் மேலாக நானும் ரவுடிதான் பட காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இதிலிருந்து நயன்தாரா தனுஷை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என தெரிகிறது. இது நிச்சயம் பூகம்பமாக வெடிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இப்போது ஆவணப்படம் எப்படி இருக்கிறது என்ற விஷயத்திற்கு வருவோம்.
டயானா மரியம் குரியன் லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை அடைந்தது எப்படி என்பதுதான் இந்த ஆவணப்படம். இதில் நயன்தாரா தான் கடந்து வந்த கடினமான பாதையை பற்றி பேசி இருக்கிறார். அது மட்டும் இன்றி தன்னுடைய பழைய காதல்களை பற்றியும் கூறியுள்ளார்.
ஆரம்ப காலத்தில் குண்டாக இருந்ததால் எதிர்கொண்ட அவமானங்கள் அதன் பின் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்தது என அனைத்தையும் அவர் பேசியிருக்கிறார். அதேபோல் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் அவர்களுடைய காதல் கதையை பற்றியும் சொல்லியுள்ளார்.
மேலும் , பழைய காதலால் நயன்தாரா பட்ட கஷ்டங்களையும் விவரித்துள்ளார். அதேபோல் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த சமயத்தில் அவர் விரதம் இருந்து எவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்தார் என்பதையும் அப்பட இயக்குனர் பகிர்ந்துள்ளார்.
இதில் விக்கியுடன் காதல் திருமண நிகழ்வு அனைத்தும் காட்டப்பட்டிருக்கிறது. இப்படியாக வெளிவந்துள்ள இந்த ஆவணப்படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பதே உண்மை. இதுக்கா இவ்வளவு அலப்பறை என அசால்ட் ஆக சோசியல் மீடியாவில் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
காலதாமதம் ஆன காரணத்தினாலும் தனுஷை நயன் குற்றம் சாட்டியதாலும் இந்த ஆவணப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் லேடி சூப்பர் ஸ்டார் இந்த கல்யாண வீடியோவை வைத்து 25 கோடி வரை லாபம் பார்த்து விட்டார்.