சினிமா

தளபதி படம் மிஸ் ஆகிருச்சு! அமரன் குறித்து விஜய் என்ன சொன்னார்! ராஜ்குமார் பெரியசாமி

Published

on

தளபதி படம் மிஸ் ஆகிருச்சு! அமரன் குறித்து விஜய் என்ன சொன்னார்! ராஜ்குமார் பெரியசாமி

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். இது மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுடைய வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.இதில் மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயனும் அவரது மனைவியாக இந்து ரெபேக்கா வர்கீசாக சாய்பல்லவியும் நடித்திருந்தனர். ரிலீசான நாள் முதல் அமோகமான வசூல் பெற்று வரும் அமரன் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.இந்நிலையில் பல பிரபலங்கள் இந்த படத்தினை புகழ்ந்து தள்ளுகின்றனர்.இந்நிலையில் நடிகர் விஜய் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை சந்தித்துள்ளார். நடிகர் விஜயை சந்தித்தபோது அவர் பேசியது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கின்றார். “நான் தளபதி விஜய்யுடன்  25 நிமிடம் பேசியிருப்பேன். ஒரு அற்புதமான மனிதர். துப்பாக்கி படத்தில் பார்த்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கின்றார். மேலும் என்னிடம் கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கக் கூடாதா? வந்திருந்தா நம்ம சேர்ந்து ஒரு படம் பண்ணி இருக்கலாமே, ஆனா இப்போ…’என்று பேசியிருந்ததாக கூறியிருந்தார். “d_i_aஒருவேளை நடிகர் விஜய்க்கு தளபதி 69 திரைப்படம் கடைசி படமாக இல்லை என்றால் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கட்டாயம் ஒரு திரைப்படத்தில் விஜய் நடித்திருப்பார். அது மிஸ் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ராஜ்குமார் அடுத்ததாக நடிகர் தனுஷின் 55வது  திரைப்படத்தினை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் பூஜை புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version