இந்தியா
திருப்பூரை அதிரவைத்த மூன்று கொலைகள்! ஒரே இரவில் நடந்த பயங்கரம்!
திருப்பூரை அதிரவைத்த மூன்று கொலைகள்! ஒரே இரவில் நடந்த பயங்கரம்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், சேமலைகவுண்டம்பாளையத்தில் தெய்வசிகாமணி-அலமாத்தாள் தம்பதி வசித்து வந்தனர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், தனது பெற்றோரை பார்க்க சென்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று தெய்வசிகாமணியின் தோட்டத்தில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வெட்டியதாக தெரிகிறது. அதனை தடுக்க முயன்ற அலமாத்தாள், செந்தில்குமார் ஆகியோரையும் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை, தெய்வசிகாமணியின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர், தாய், தந்தை, மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்திற்குச் சென்ற அவிநாசி பாளையம் காவல்துறையினர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தது யார்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.