இந்தியா
நடிகர் சத்யராஜூக்கு ‘கலைஞர் விருது’!
நடிகர் சத்யராஜூக்கு ‘கலைஞர் விருது’!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முத்தமிழ் பேரவையின் பொன்விழா வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதன்படி, நடிகர் சத்யராஜூக்கு ஸ்டாலினால் ‘கலைஞர் விருது’ வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்;
நடிகர் சத்யராஜூக்கு கலைஞர் விருது வழங்கி வைப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தகுதியானவருக்கு இவ்விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் வசனத்தைப் பேசி நடித்தவர், பெரியாராகவே வாழ்ந்து காட்டியவர். ஆகவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சினிமாவில் இருந்துகொண்டே தனது திராவிட கொள்கைகளை துணிச்சலாக பேசக் கூடியவர் சத்யராஜ். அவருக்கு மீண்டும் மீண்டும் எனது பாராட்டுக்கள்- என்றார். (ச)