திரை விமர்சனம்

பிஞ்சு குழந்தைகளுக்கு எமனாக மாறும் சைக்கோ.. கதி கலங்க வைத்த உண்மை சம்பவம், செக்டர் 36 விமர்சனம்

Published

on

பிஞ்சு குழந்தைகளுக்கு எமனாக மாறும் சைக்கோ.. கதி கலங்க வைத்த உண்மை சம்பவம், செக்டர் 36 விமர்சனம்

இப்போதெல்லாம் திகில் கலந்த திரில்லர் படங்களுக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் ஓடிடி தளங்களில் இந்த கதையம்சம் கொண்ட படங்களை ரசிகர்கள் தேடி தேடி பார்க்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்காக வெளிவந்துள்ள படம் தான் .

19 வருடங்களுக்கு முன்பு உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த உண்மை சம்பவத்தின் தழுவல் தான் இப்படம். இயக்கத்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.

Advertisement

பிஞ்சு குழந்தைகளை கடத்தி கொன்று போடும் சைக்கோ கொலையாளியை பற்றிய கதைதான் இப்படம்.. தொழிலதிபரின் வீட்டில் வேலை செய்யும் பிரேம்சிங் பல நேரங்களில் அங்கு தனியாகத்தான் இருப்பார். அப்போதெல்லாம் ஏழை குழந்தைகளை கடத்தி வந்து கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சாக்கடையில் வீசி விடுகிறார்.

நாளுக்கு நாள் குழந்தைகள் காணாமல் போவது அதிகமான நிலையில் காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்கிறார்கள். ஆனால் போலீஸ் அதிகாரி அதில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். அந்த சமயத்தில் அவருடைய குழந்தையை கடத்துவதற்கும் கொலைகாரன் பிளான் செய்கிறான்.

அதன் பிறகு இந்த வழக்கில் தீவிரம் காட்டும் காவல்துறை அதிகாரி கண்டுபிடிக்கும் அதிர வைக்கும் உண்மைகள் தான் இப்படத்தின் முழு கதை. கடந்த 2005 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Advertisement

அதில் கொலை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் கருணை மனு, மேல்முறையீடு ஆகியவற்றின் மூலம் போதிய ஆதாரம் இல்லை என அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது தான் வேதனையின் உச்சம்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே உணர்வு இப்படத்தை பார்க்கும் போதும் வருகிறது. கொலையாளி குழந்தைகளை கொல்லும் காட்சிகள் அனைத்தும் ஈரக் கொலையை நடுங்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இதயம் பலவீனமானவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

அந்த சைக்கோ கில்லர் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் தனது நடிப்பால் மிரட்டி இருக்கிறார் விக்ராந்த் மாஸ்ஸி. வாக்குமூலம் கொடுக்கும் காட்சி உட்பட படம் முழுக்க அவருடைய நடிப்பு மிரள வைத்துள்ளது. இப்படி கூட கொடூரமாக ஒருவர் இருப்பாரா என நினைக்க வைத்துள்ளார்.

Advertisement

இதற்கு அடுத்ததாக திரைக்கதையை கொண்டு சென்ற விதமும் காட்சிகளும் பின்னணி இசையும் பெரும் பலமாக இருக்கிறது. இப்படி உயிரை உறைய வைக்கும் இப்படத்தை ரசிகர்கள் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் கண்டு களிக்கலாம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version