இந்தியா

மனைவியை 40 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்!

Published

on

மனைவியை 40 துண்டுகளாக வெட்டி வீசிய கணவன்!

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த நரேஷ் பெங்ரா என்பவர் அவரது மனைவிக்குத் தெரியாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, தென் மாநிலத்துக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

கணவனைத் தேடி அவரது மனைவி அலைந்துள்ளார். இந்நிலையில் இம் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஜார்க்கண்ட் திரும்பியுள்ளார் நரேஷ்.

Advertisement

திரும்பியதும் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை 40 துண்டுகளாக வெட்டி, காட்டுப் பகுதியில் வீசியுள்ளார்.

இம் மாதம் 24 ஆம் திகதி ஜோர்டாக் கிராமத்துக்கருகில் தெருநாய் ஒன்று மனித உடல் உறுப்புக்களுடன் சுற்றித் திரிந்துள்ளது.

இது தொடர்பில் அப் பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அப் பகுதியில் சோதனை செய்த பொலிஸார், பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கிடப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸாரின் தீவிர விசாரணையில் நரேஷ் மனைவியை கொலை செய்தமை தெரிய வந்துள்ளது.

பொலிஸார் நரேஷை விசாரித்ததில், தனது இரகசிய திருமணத்தை பற்றி அறிந்துகொண்டு தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஜார்க்கண்ட் திரும்பும்படி வற்புறுத்தியதாகவும் இதனால் கொலை செய்து உடலை 40 துண்டுகளாக வெட்டியதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

Advertisement

கைது செய்யப்பட்ட நரேஷ், தமிழகத்தில் இறைச்சிக் கடையில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version