இந்தியா

ரசிகர்கள் முக்கியம் இல்லையா தலைவரே.. ரஜினி, சீமான் சந்திப்பால் வெடித்த அதிருப்தி

Published

on

ரசிகர்கள் முக்கியம் இல்லையா தலைவரே.. ரஜினி, சீமான் சந்திப்பால் வெடித்த அதிருப்தி

கடந்த வாரம் முழுவதும் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட கலவரங்கள் நடந்தது. அதில் , சர்ச்சை ஏ ஆர் ரகுமானின் விவாகரத்து பூதாகரமாக வெடித்தது. அதையெல்லாம் தாண்டி சீமான் சந்திப்பும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னபோது நாம் தமிழர் கட்சி தான் அவரையும் அவரின் குடும்பத்தையும் படுமோசமாக விமர்சித்தனர். கூட எல்லை மீறி பேசி இருந்தார்.

Advertisement

அப்படியெல்லாம் இருந்துவிட்டு இப்போது எப்படி இவர்களுடைய சந்திப்பு நடந்தது என்பது பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இது வெளிப்படையான கருத்துக்களாக கிளம்பிய நிலையில் ரஜினி ரசிகர்கள் கூட அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

சீமான் ரஜினியை விமர்சித்தபோது ரசிகர்கள் பதிலுக்கு களமிறங்கி தலைவருக்காக சப்போர்ட் செய்தனர். ஆனால் அவர்களுடைய எண்ணத்திற்கு மதிப்பளிக்காமல் ரஜினி இந்த சந்திப்பை நடத்தியது தற்போது ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

உண்மையில் ரஜினி இதை செய்திருக்கக் கூடாது என்பதே அனைவரின் எண்ணம். அதேபோல் இந்த சந்திப்பு சாதாரணமானது என்ற தகவல் கசிந்து வருகிறது. உண்மையில் அரசியல் ரீதியான சந்திப்பு தான் இது.

Advertisement

ஏனென்றால் சீமானுக்கு விஜய் ரசிகர்களின் ஆதரவு தற்போது முற்றிலும் போய்விட்டது. அதனால் ரஜினியின் ஆதரவை அவர் தேடுவதாக உறுதியான தகவல்கள் பரவி வருகிறது. அதற்காகத்தான் இப்படி ஒரு சந்திப்பும் நடந்துள்ளது.

இருப்பினும் தலைவரின் ரசிகர்கள் இதை விரும்பவில்லை. அதிலும் சமீப காலமாக ரஜினி ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்ற கருத்து இருக்கிறது. இந்த சூழலில் இந்த சந்திப்பும் பின்னடைவாக உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version