சினிமா

விஜய் சேதுபதியுடன் மோதும் சமுத்திரக்கனி.. கண்டென்ட்டு நல்லா இருந்தா போட்டு பாத்துட வேண்டி தானே!

Published

on

விஜய் சேதுபதியுடன் மோதும் சமுத்திரக்கனி.. கண்டென்ட்டு நல்லா இருந்தா போட்டு பாத்துட வேண்டி தானே!

எளியவன் சொல் அம்பலம் ஏறாது என்று சொல்வார்கள். அது தமிழ் சினிமாவுக்கு சரியாக பொருந்தும். பொதுவாக பெரிய ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படம் என்றாலே அதன் மீது பெரிய அளவிலான எதிர்பார்ப்பு வந்துவிடும்.

அதே நேரத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி பத்து நாட்கள் மேல் தான் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே மக்களுக்கு தெரியும். இதனாலே சில நேரங்களில் சில சரியான படங்கள் கூட வெற்றி அடையாமல் போயிருக்கின்றன.

Advertisement

ஆனால் சமீப காலமாக சமூக வலைத்தளங்களின் மூலம் இது போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் வெற்றியை பார்த்து வருகின்றன. அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களுடன் சின்ன படங்களை ரிலீஸ் பண்ண எப்போதுமே தயாரிப்பாளர்கள் தயங்குவது உண்டு.

ஆனால் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விடுதலை பார்ட் 2 படத்தின் ரிலீஸ் தேதி அன்று சமுத்திரகனி நடித்த திரு மாணிக்கம் படத்தை ரிலீஸ் பண்ண இருக்கிறார்கள். விடுதலை முதல் பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அப்படி இருக்கும் பட்சத்தில் அதிகம் கவனம் பெறாத திரு மாணிக்கம் படத்தை ரிலீஸ் பண்ண இருக்கிறார்கள். ஆர் ஜே பாலாஜி சமீபத்தில் சொன்ன மாதிரி நல்ல கன்டென்ட் எப்படி மக்களிடையே ரீச் ஆகும் என்ற மனக்கணக்கு தான் இந்த படத்திற்கு.

Advertisement

நல்ல கதைக்களம், க்ரைம் திரில்லர் என்பதால் தைரியமாக இந்த படத்தை விடுதலை படத்துடன் மோத விடுகிறார்கள். திரு மாணிக்கம் படத்தின் டீசரில் சொன்ன மாதிரி தவறு எனில் வலியதும் வீழும், சரி எனில் எளியதும் வாழும் என்பது போல் தான் இந்த போட்டி.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version