சினிமா

விடாமுயற்சி Vs குட் பேட் அக்லி.. ரிலீஸ் குழப்பத்தில் அஜித் ரசிகர்கள், பின்னணி என்ன.?

Published

on

விடாமுயற்சி Vs குட் பேட் அக்லி.. ரிலீஸ் குழப்பத்தில் அஜித் ரசிகர்கள், பின்னணி என்ன.?

இயக்கத்தில் நடிப்பில் எப்போதோ ஆரம்பிக்கப்பட்ட நீண்ட காலமாக சிக்கலில் இருந்தது. ரசிகர்களும் விடாமுயற்சியோடு அதை எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் டீசர் வெளியானது.

முழு கதையையும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இருந்த டீசர் தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறது. நீண்ட காலம் கழித்து அஜித்தை பார்த்த ரசிகர்களும் அதை கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

ஆனால் அங்கு தான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஏனென்றால் விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என டீசரில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை மட்டுமல்லாமல் மீடியாவில் இருப்பவர்களை கூட குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

ஏனென்றால் இயக்கத்தில் குட் பேட் அக்லியில் அஜித் நடித்து வருகிறார். இப்படம் ஆரம்பிக்கப்படும் போதே பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர். அதை தொடர்ந்து படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை கொடுத்திருப்பது படகுழுவிற்கு கூட அதிர்ச்சி தான். ஆனால் லைக்காவை பொருத்தவரையில் இப்படம் ஆரம்பித்து வருட கணக்காகி விட்டது. அதேபோல் போட்ட பட்ஜெட்டை தாண்டி செலவு இழுத்துவிட்டது.

Advertisement

அதனால் பொங்கலுக்கு வெளியாகி லாபம் பார்த்து விட வேண்டும் என நினைக்கின்றனர். ஒரு வேளை குட் பேட் அக்லி டீம் நாங்களும் அதே தேதியில் தான் வருவோம் என்று சொன்னால் நிச்சயம் அதற்கு அஜித் சம்மதம் வேண்டும்.

இருப்பினும் லைக்கா வருவது வரட்டும் என அறிவிப்பை வெளியிட்டு விட்டனர். இதில் அஜித் முடிவெடுத்தால் மட்டுமே எதுவும் உறுதியாகும். அதனால் இந்த குழப்பம் வெகுவிரைவில் தீர்ந்துவிடும் என ரசிகர்களும் இப்போது நம்பிக்கையில் இருக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version