விநோதம்
178 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ள அதிசய சூரிய கிரகணம்..!
178 ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ள அதிசய சூரிய கிரகணம்..!
இன்று சுமார் 178 ஆண்டுகளுக்குப் பின்பு அதிசய சூரிய கிரகணம் நிகழவுள்ளது. வானில் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் போல இந்த சூரிய கிரகணமானது தோன்றும் என கூறப்படுகிறது.
நம்முடைய நேரப்படி இன்று இரவு 8:34 மணி முதல் நள்ளிரவு 2:25 மணி வரை இது நிகழவுள்ளது. அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த கிரகணமானது தெரியும் என கூறப்படுகிறது.
அதன்படி, அமெரிக்காவில் மெக்சிகோ தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதவர்களுக்கு பார்க்கும் வண்ணம், நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. இதனை நாசாவின் இணையதள பக்கத்தின் மூலமாக நாம் காணலாம்.
1845 ஆம் ஆண்டு இந்த சூரிய கிரகணம் கடைசியாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அரிய கிரகணம் மகாளய அமாவாசை தினத்தில் நிகழ்வதால் இந்த நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது.