சினிமா

2024 ஆம் ஆண்டின் மிக நீளமான படம் இதுதான்… ரன்னிங் டைம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

Published

on

2024 ஆம் ஆண்டின் மிக நீளமான படம் இதுதான்… ரன்னிங் டைம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…

2024 ஆம் ஆண்டின் மிக நீளமான படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்துடைய ரன்னிங் டைமில் நீங்கள் 2 ஹாலிவுட் படங்களை பார்த்து விடலாம்.

Advertisement

அதிக நீளமாக இந்த படம் இருந்தாலும் ஏராளமான சுவாரசிய காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை தராது என்று நம்பப்படுகிறது. நடப்பு ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளபுஷ்பா 2’ திரைப்படம் தான் இந்த ஆண்டின் மிக நீளமான படமாக அமைய உள்ளது.

இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளிவந்த போது அதனை பெரும்பாலானோர் நம்ப தயாராக இல்லை. ஏனென்றால் இந்த திரைப்படம் 200 நிமிடங்களுக்கு மேலாக ஓடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்தபுஷ்பா 2’ திரைப்படம் ஓடும் என சென்சார் போர்டு அளித்துள்ள சர்டிபிகேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இதே ஆண்டில், நடப்பு ஆண்டில் வெளியானகல்கிதிரைப்படம் 3 மணி நேரம் 1 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இருந்தது. அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு வெளியானஅனிமல்திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் ஆகும். மிக நீளமான படமாக இருந்தாலும்புஷ்பா 2’ திரைப்படம் கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் படம் பெரும்பாலும் ரசிகர்களுக்கு சலிப்பை தராது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ராவ் ரமேஷ், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சுகுமார் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா முழுவதும் ஏராளமான திரையரங்குகளில் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version