இந்தியா

Chain Snatching: யூட்டியூப் பார்த்து செயின் பறிப்பு – 12ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேர் கைது

Published

on

Chain Snatching: யூட்டியூப் பார்த்து செயின் பறிப்பு – 12ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேர் கைது

சென்னையில் யூடியூப் பார்த்து 5 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உட்பட மூவரை காவலர்கள் கைது செய்தனர்.

Advertisement

சென்னை கொளத்தூரில் விஜயலட்சுமி என்பவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 5 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து கொளத்தூர் குற்றப்பிரிவு காவலர்களிடம் விஜயலட்சுமி அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய காவலர்கள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், தினேஷ்குமார் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் என மூவரை கைது செய்தனர்.

இதையும் படிக்க:
ரயில் கழிப்பறையில் இருந்த 2 சிறுவர்கள்! சத்தம் கேட்டு மீட்ட போலீசார்…

Advertisement

இதையடுத்து காவலர்கள் மூவரிடம் நடத்திய விசாரணையில், மூவரும் பணம் சம்பாதிக்க முடிவு செய்து செயின் பறிப்பு வீடியோக்களை யூடியூபில் பார்த்து கற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளனர். அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக மூவரும் சேர்ந்து 5 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனிடையே மூவரிடம் இருந்து பத்து சவரன் மதிப்புள்ள மூன்று தங்க செயின்கள், ஒரு கவரிங் செயின் மற்றும் ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து தனுஷ் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த காவலர்கள், 17 வயது மாணவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version