சினிமா

Dhanush – Aishwarya Divorce : தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் ரத்து.. விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Published

on

Loading

Dhanush – Aishwarya Divorce : தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் ரத்து.. விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவு

Advertisement

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷ்க்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிங்கா, யாத்ரா எ இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் தங்களுடைய திருமண வாழ்வில் இருந்து பிரிந்து விட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணை நடைபெற்று வந்தது. முதலில் இருவருக்கும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியிம் விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது இருவரும் மூன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. கடந்த 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் நேரில் ஆஜராகி இருந்தனர்.

Advertisement

அப்போது பரஸ்பரம் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக இருவரும் தெரிவித்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பதிவேட்டில் கையொப்பம் இட்டு சென்றனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சுபாதேவி, இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 18 தேதி நடைபெற்ற திருமணம் பதிவை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version