இந்தியா
School Leave: இன்று (நவ 29) எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!
School Leave: இன்று (நவ 29) எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!
அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை விடப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளுக்காக அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கள் கூறியுள்ளார்.
மேலும் காரைக்காலுக்கு வந்துள்ள பேரிடர் மீட்புப் படையினருடன் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் ஆலோசனை நடத்தினார். விழிப்புடனும், அதிக கண்காணிப்புடனும் செயல்பட்டு, மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
மேலும் கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.