இந்தியா

School Leave: மேலும் ஒரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Published

on

School Leave: மேலும் ஒரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Advertisement

வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா என்ற கேள்வி இருந்துவந்த நிலையில், அது புயலாக வலுபெறாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருந்தது.

Advertisement

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இதனையடுத்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று (29.11.24) சென்னை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

இன்று காலை 6:30 நிலவரப்படி கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version