சினிமா

அந்த விஷயத்துல நான் கமலை விட Best.. சூதுகவ்வும்-2 புரமோசனில் பேசிய சிவா!

Published

on

அந்த விஷயத்துல நான் கமலை விட Best.. சூதுகவ்வும்-2 புரமோசனில் பேசிய சிவா!

நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் சூதுகவ்வும். இப்படத்தில் பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

இப்படமும், சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
இதையடுத்து, சூதுகவ்வும் படத்தின் 2 வது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இதையடுத்து, இப்படம் உருவாகியுள்ளது. சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் என்று பெயரிட்டுள்ளனர்.

Advertisement

இப்படத்தை எம்.எஸ். அர்ஜூன் இயக்க,
விஜய்சேதுபதிக்குப் பதிலாக மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். இதில், ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்பட்த்தின் முதல் லுக் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த 20 ஆம் தேதி இப்பட டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

வரும் டிசம்பர் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகும் நிலையில், இப்படத்தின் புரமோசன் பணிகள் நடந்து வருகிறது. பிரபல யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த சூது கவ்வும் 2 பட ஹீரோ மிர்சி சிவா, இப்படத்தைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது இப்படத்தில் உங்கள் நடனம் இடம்பெற்றுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த சிவா, அப்படி இல்ல. அது பெரிய ஏமாற்றம் தான். கிளாசிகல் ஜர்னல் எதுவும் இல்லாததால் அப்படி நடனம் இடம்பெறவில்லை. டான்ஸ் என்பது கிப்ட். அது நமக்கு இருக்கு எனும் போது என்று கூறி அருகில் இருந்த கருணாகரனை குறிப்பிட்டு, இவரும் நல்ல டேன்சர் என கலாய்த்தார்.

Advertisement

ஒரு ஆர்டிஸ்ட பாத்து டான்ஸ் மாஸ்டர் பயப்படராங்கன்னா அது நான் தான். பாடலுக்கு எல்லோரும் ஒரே மாதிரி ஆடினால், நான் அப்படி ஆட மாட்டேன், ஒரு ஸ்டெப் போட்டால் அடுத்து அதே ஸ்டெப்பை என்னால் போட முடியாது. நான் கமல் சாரிடம் ஒரு விஷயம் சொன்னேன்.

அவர் கஷ்டப்பட்ட ஒரு விசயம் எனக்கு ஈஷியாக வரும் என்று. அவர் என்னப்பா என்று கேட்டார். சிப்பிக்குள் முத்து படத்தில் தாளத்துக்கு தப்பு தப்பாக டான்ஸ் ஆட வேண்டும். இதற்காக அவருக்கு அரை நாள் பிராக்டிஸ் பண்னாரு. அது எனக்கு ஈஷியாக வரும். எனக்கு நேச்சுலராக வரும். அது காட்ஸ் ஜிப்ட். லைப் டைம்ல கமல் சாரை விட பெட்டரா பெர்பாமென்ஸ் பண்ணியிருக்கேன்னா அந்த இடத்தில யாரு பெரிய ஆளுன்னு நெனச்சிகோங்க என்று கூறிவிட்டு சிரித்தார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனகே அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அவரே அவரை கலாய்த்துக் கொள்ளும்போது, இப்போது சூதுகவ்வும் படம் நிச்சயம் பலரை கவரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version