உலகம்

அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்பு!

எலான் மஸ்க் தலைமையின்கீழான, அமெரிக்க அரசு செயல்திறன் துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான துறையின் (DOGE) தலைமைக்கு தொழிலதிபா் எலான் மஸ்க்கையும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

Advertisement

இந்தத் துறையின் வேலைவாய்ப்புகளை, துறையின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளனர். அறிவிப்பில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, “எங்களுக்கு அதிகளவிலான பகுதிநேர யோசனையாளர்கள் தேவையில்லை. செலவுக் குறைப்பு வேலைக்கு, வாரத்தில் 80 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்ய விரும்பும் அதிக அறிவாற்றல் மிக்கவர்கள்தான் தேவை. உங்களிடம் அந்த தகுதி இருந்தால், விண்ணப்பிக்கலாம்.

முதலில் விண்ணப்பிக்கும் முதல் ஒரு சதவிகித விண்ணப்பங்களை எலான் மஸ்க்கும், விவேக் ராமசாமியும் நேரடியாக மதிப்பாய்வு செய்யவுள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரசுத் துறைகள் மேற்கொள்ளும் வீண் செலவுகள் காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ஏற்படும் 6.5 லட்சம் கோடி (சுமார் ரூ.135 லட்சம் கோடி) இழப்பை அவா்கள் தடுத்து நிறுத்துவார்கள் என்று கூறிய டிரம்ப், துறையை நிர்வகிக்க எலான் மஸ்க்கையும் விவேக் ராமசாமியையும் நியமித்தார்.

Advertisement

இந்த நிலையில், “ஒரு நபரின் வேலையை செய்ய 2 பேர் நியமிக்கப்பட்டிருப்பது என்பது எவ்வளவு திறமையானது’’ என்று அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரென் விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, எலான் மஸ்க் “உங்களைப் போன்று, எங்களுக்கு ஊதியம் கிடையாது; அப்படியெனில், இது உண்மையில் மிகவும் திறமையானதுதான். இந்தத் துறை அமெரிக்க மக்களுக்காக பெரிய நன்மைகளைச் செய்யும். இனிவரும் வரலாறு, நீதிபதியாக இருந்து பதில் சொல்லும்’’ என்று கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version