இந்தியா

இந்திய ரயில்வேயின் முதலாவது புல்லட் ரயில்

Published

on

இந்திய ரயில்வேயின் முதலாவது புல்லட் ரயில்

இந்திய ரயில்வேயின் முதலாவது புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதாகவும், இது சராசரியாக மணிக்கு 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லட் ரயில் திட்டம் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில்,

Advertisement

புல்லட் ரயில் தயாரிப்பை இந்திய ரயில்வே வேகப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் புல்லட் ரயில்கள் மற்றும் அதிவேக வழித்தடத்துக்கான சிக்னல் கருவிகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால், புல்லட் ரயில் பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதற்கான நில கொள்முதல் நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளன. 320 கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயிலுக்கான கட்டமைப்பு பணிகள் தயார் நிலையில் உள்ளன.

மும்பை அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் அம்சங்கள் மிகவும் மதிப்பு மிக்கவையாக இருக்கும். பல வழித்தடங்களில் இத்திட்டத்தை மேற்கொள்ள தற்போது இந்தியாவால் முடியும். எதிர்காலத்தில் நாம் சொந்த ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மணிக்கு 280 கி.மீ வேகம் வரை செல்லும் புல்லட் ரயில்களை தயாரிக்கும் அளவுக்கு திறன் மிக்கதாக மாற இந்தியா விரும்புகிறது என்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version