உலகம்

இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல்..

Published

on

இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல்..

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், லெபனானில் 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தப் போரை டிரம்ப் தான் நிறுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகள் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், செயல்பட்டு வரும் ஹிஸ்மில்லா அமைப்பின் இருப்பிடங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

Advertisement

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம்  லெபனானின் கிழக்கு பகுதியான ஹெர்மல் என்ற இடத்தில் உள்ள கிராமங்கள், நகரங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மொத்தம் 57 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்தத் தாக்குதலில் வரலாற்று சிறப்புமிக்க அல் மான்சியா என்ற கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், புதிதாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டிரம்ப் தான் இந்தப் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version