உலகம்

ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு

Published

on

ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஸ்கியான் பதவியேற்பு

ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி  கடந்த மே 17 ஆம் திகதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தத்தனை தொடர்ந்து அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28ஆம் திகதி நடைபெற்றது.

இத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் திகதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

அதனை தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதவியேற்பு விழாவில்  ‘புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பாதுகாவலனாக  இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்’ என அவர்  உறுதி மொழி அளித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version