சினிமா

என் வாழ்க்கையே முடிஞ்சிருக்கும்!! நயன்தாரா செய்த விஷயத்தால் தம்பி ராமையா எடுத்த முடிவு..

Published

on

என் வாழ்க்கையே முடிஞ்சிருக்கும்!! நயன்தாரா செய்த விஷயத்தால் தம்பி ராமையா எடுத்த முடிவு..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருபவர் நடிகர் தம்பி ராமையா. சமீபத்தில் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கு தன் மகன் உமாபதிக்கு திருமணம் செய்து வைத்தார்.தற்போது ராஜா கிளி என்ற படத்தில் நடித்தும் இசையமைத்தும் இருக்கிறார் தம்பி ராமையா. இப்படத்தின் இஅசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில், என் அப்பா கவிதைகள் அதிகமாக எழுதிய நிலையில், நானும் ஓரளவிற்கு கவிதைகள் எழுதி தன் அம்மாவிடம் பாராட்டை வாங்குவேன். அதன் தாக்கத்தால் படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியதாகவும் கூறியிருக்கிறார்.என் அம்மா இல்லையென்றால் தானும் இல்லை என்ற அளவில் இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் அம்மா மறைந்தபோது, மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியிருக்கிறார். அந்நேரத்தில் தன் மகளுக்கு மட்டுமே திருமணம் நடந்திருந்தது.மகன் உமாபதிக்கு திருமணமாகாத நிலையில், தான் தற்கொலை செய்துக்கொள்ள நினைத்ததாகவும் தம்பி ராமையா தெரிவித்துள்ளார். அந்நேரத்தில் தன்னுடைய அம்மா மறைவு குறித்து கேள்விப்பட்ட நடிகை நயன் தாரா, தன்னிடம் பேசினார்.அப்போது டோடா படத்தில் இணைந்து நடித்தபோது தான் நயன் தாரா தனக்கு போன் செய்து யதார்த்ததை புரியவைத்ததால் தற்கொலை எண்ணம் போனதாகவும் நயன் தாரா மட்டும் எனக்கு கால் செய்து பேசாமால் இருந்திருந்தால் என்ன நட்ந்திருக்கும் என்று யோசிக்கக்கூட முடியவில்லை என்று தம்பி ராமையா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version