உலகம்

ஒசாமா பின்லேடன் மகன் பிரான்ஸில் இருந்து வெளியேற உத்தரவு!

Published

on

ஒசாமா பின்லேடன் மகன் பிரான்ஸில் இருந்து வெளியேற உத்தரவு!

அல்கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடனின் இளைய மகன் உமர் பின்லேடன் சவூதியில் பிறந்து  ஆப்கானிஸ்தான், சூடான் நாடுகளில் வசித்தார்.பின்னர் அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வடக்கு பிரான்சில் உள்ள நார்மண்ட் என்ற இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.  

இந்த நிலையில் உமர் பின்லேடனை பிரான்சில் இருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ரீடெய்லியூ கூறும்போது, `உமர் பின்லேடன், சமூக வலைதளங்களில் மறை முகமாக பயங்கரவாதத்தை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டார். இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவின் சட்டபூர்வமான தன்மையை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உமர் பின்லேடன் எந்த காரணத்திற்காகவும் பிரான்ஸ் திரும்புவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.[ ஒ ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version