உலகம்

கனடாவில் இந்திய தூதரக சேவை முகாம்கள் ரத்து!

Published

on

கனடாவில் இந்திய தூதரக சேவை முகாம்கள் ரத்து!

கனடா பாதுகாப்பு அதிகாரிகளால் உரிய பாதுகாப்பு தர இயலாததால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த தூதரக சேவை முகாம்களை ரத்து செய்வதாக அங்குள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பா் 3-ஆம் திகதி, கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள இந்து சபா கோயிலுடன் இணைந்து இந்தியா்களுக்கு தூதரக சேவைகள் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பக்தா்களை காலிஸ்தான் ஆதரவாளா்கள் தடியால் தாக்கினா். இதுதொடா்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடா்ந்து, தற்போது முகாம்களை ரத்து செய்வதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

Advertisement

இதுதொடா்பாக கனடாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் முகாம்களை நடத்துபவா்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பைக்கூட கனடா பாதுகாப்பு அதிகாரிகளால் தர இயலாது என்பதை அண்மையில் நிகழ்ந்த சம்பவம் தெளிவாக்கியுள்ளது. இதனால் இந்திய துணைத் தூதரகம் சாா்பில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த சேவை முகாம்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன’ என தெரிவிக்கப்பட்டது.

பிராம்டன் நகரில் உள்ள கோயிலில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் மோடி கடும் கண்டனம் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவும் தெரிவித்தாா்.

கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை தொடா்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா சுமத்தி வருகிறது. இதை இந்தியா மறுத்து வரும் சூழலில் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version