உலகம்

கனமழையால் மத்திய ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிப்பு!

Published

on

கனமழையால் மத்திய ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிப்பு!

ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் வீசிய போரிஸ் புயலால் கனமழை பெய்து வருகிறது. போரிஸ் புயலால் செக் குடியரசில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

செக் குடியரசில் கடந்த 1997-ஆம் ஆண்டு, பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு பின், அந்நாடு வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பை இப்போது சந்தித்துள்ளது இர்னோ, செஸ்கி ஆகிய நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.செக் குடியரசில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்கள் குடிநீர், மின்சரம் போன்ற அடிப்படை வ்சதிஅக்லின்றி அவதியுற்றுள்ளனர்.

Advertisement

போலந்து, ஆஸ்திரியா, ரோமானியா, ஜெர்மனி, சுலோவேகியா, ஹங்கேரி ஆகிய நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பல ஆறுகளில் அபாய அளவைக் கடந்து வெள்ளம் பாய்வதால் ஊருக்குல் நீர் புகுந்ததில் பல பகுதிகள் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், போலந்தில் மழை வெள்ள பாதிப்புகளை தேசியப் பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ரோமானியாவில் 6 பேரும், ஆஸ்திரியாவில் 3 பேரும், போலந்தில் 5 பேரும், செக் குடியரசில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, செக் குடியரசில் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மத்திய ஐரோப்பாவில் கனமழை பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. மழை வெள்ளத்தில் பலர் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. [எ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version