இந்தியா
கனமழை எச்சரிக்கை… கோவை மக்களே தேவையின்றி வெளியே வர வேண்டாம்… கலெக்டர் அறிவுறுத்தல்!
கனமழை எச்சரிக்கை… கோவை மக்களே தேவையின்றி வெளியே வர வேண்டாம்… கலெக்டர் அறிவுறுத்தல்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்களை பாதுகாப்பாக கீழே இறக்கி வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். விளம்பர போர்டுகள் வைத்திருப்பவர்கள் அவற்றை இறக்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்கள் நீர்நிலைகளில் துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
நிவாரண முகாம்களில் தங்க விரும்பும் பட்சத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், வால்பாறை, உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் அணைக்கட்டு பகுதிகளுக்கும் நீர் வீழ்ச்சிக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.