உலகம்

கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கு கடவுச்சீட்டு!

Published

on

கார்ட்டூன் கதாபாத்திரத்துக்கு கடவுச்சீட்டு!

1958ஆம் ஆண்டு ‘பட்டிங்டன்’ என்ற சிறுகதைப் புத்தகத்தை இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளரான மைக்கேல் பான்ட் எழுதினார்.

பழுப்பு கரடியை கதாநாயகனாக கொண்டு எழுதப்பட்ட இந்த புனைவு சிறுகதைப் புத்தகத்தின் பிரதிகள் கோடிக்கணக்கில் விற்று தீர்ந்து பிரபலமானது.

Advertisement

இதனை தொடர்ந்து அந்த பாத்திரத்தை மையமாக கொண்டு தொடர்கதைகள், கார்ட்டூன் தொடர் மட்டுமின்றி சினிமாப் படங்களும் எடுக்கப்பட்டு வருகிறன.

மறைந்த இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்துக்கு பிடித்தமான புனைவு பாத்திரமாக ‘பட்டிங்டன்’ கரடி விளங்கியது.

இந்நிலையில், ‘பட்டிங்டன்’ கதாபாத்திரத்தை தழுவி உருவாகும் புதிய சினிமா படத்துக்காக போலியான கடவுச்சீட்டு (Passport) ஒன்றை உருவாக்கித் தருமாறு, குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் படக்குழுவினர் விண்ணப்பித்திருந்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு ‘பட்டிங்டன்’ பெயரில் உண்மையான கடவுச்சீட்டை வழங்கிக் கௌரவித்துள்ளது.

இங்கிலாந்து அரசு, புனைவு கதாபாத்திரம் ஒன்றுக்கு கடவுச்சீட்டு வழங்கியமை இதுவே முதல்தடவையாகும். [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version