இந்தியா

ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

Published

on

ஜெயலலிதாவை பழி வாங்கிய ரஜினி.. நடு ரோட்டில் செய்த மாஸ் சம்பவம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு கால கட்டத்தில் எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என வெளிப்படையாகவே அவர் தெரிவித்து இருந்தார்.

அதேபோல் இருவரும் இருந்த மேடையில் கூட ஜெயலலிதாவை எதிர்த்து தில்லாக பேசிய நடிகரும் ரஜினி தான். ஆனால் ஜெயலலிதாவை அவர் எதிர்ப்பதற்கு காரணமாக இருந்த ஒரு சம்பவம் பலரும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

Advertisement

1992ல் முதல்வராக இருந்தால் காலகட்டம் அது. அப்போது ரஜினி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பயணித்த போது போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஏன் என்று விசாரித்த போது முதல்வர் வாகனம் வருகிறது அதனால் காத்திருங்கள் என்று கூறியிருக்கின்றனர்.

எவ்வளவு நேரம் ஆகும் என தலைவர் விசாரித்திருக்கிறார். போலீசார் அரை மணி நேரம் என்று சொன்னதில் அவ்வளவு பெரிய காரா வருகிறது என கேட்டுவிட்டு சற்று நேரம் அமைதியாக இருந்திருக்கிறார்.

பிறகு காரை விட்டு இறங்கி அருகில் இருந்த பெட்டி கடையில் சிகரெட் வாங்கி இருக்கிறார். அதை தன்னுடைய ஸ்டைலில் பற்றவைத்து மாஸாக அங்கு நின்றாராம். உடனே அவரைப் பார்த்த பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்தனர்.

Advertisement

இதனால் அந்த இடம் பரபரப்பாக மாறி இருக்கிறது. உடனே பதறிப்போன போலீசார் முதல்வர் வரும் நேரத்தில் இவ்வளவு கூட்டம் இருப்பது நல்லது கிடையாது என ரஜினியை நீங்கள் போகலாம் சார் என பவ்யமாக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு வந்த தேர்தலில் தான் ரஜினி ஜெயலலிதாவை எதிர்த்து திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். இப்படி முதல்வரையே எதிர்த்து தில்லாக சம்பவம் செய்த சூப்பர் ஸ்டார் என அப்போதே கொண்டாடப்பட்டார். அதை இப்போது ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version