உலகம்
ஜோர்ஜிய தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டம்!
ஜோர்ஜிய தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டம்!
கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவியுள்ள நாடான ஜோர்ஜியாவின் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜோர்ஜியாவின் பாராளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட பிரதமர் இராக்ளி கொபாகிட்ஸே தலைமையிலான ஆளும் ஜோர்ஜியன் ட்ரீம் (ஜிடி) கட்சி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 150 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 89 இடங்களை பெற்று அக்கட்சி வெற்றி பெற்றதாகவும், 53.93 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாகவும் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகளை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள், இம்முடிவுகளை ஏற்க மறுத்துள்ளன.
மேற்கத்திய ஆதரவாளரான ஜோர்ஜிய ஜனாதிபதி சலோமி ஸூரபிச்விலி, இத்தேர்தல் முடிவுகள் சட்டவிரோதமானவை என்று விமர்சித்துள்ளதோடு ரஷ்யாவின் தலையீட்டுடன் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியை மிகக் கடுமையாக எதிர்த்துவரும் அவர், தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் தலைநகர் டிபிளிசியில் போராட்டம் நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். [எ]