உலகம்

ஜோ பைடனை சந்திக்கும் டிரம்ப்!

Published

on

ஜோ பைடனை சந்திக்கும் டிரம்ப்!

அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டமைக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் திகதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.

Advertisement

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் வரும் புதன்கிழமை (13-ம் திகதி ) சந்தித்துப் பேச உள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version