இந்தியா
தீவிரமான புயலாக மாறியது பெங்கால் – சிக்கியது தமிழகம்!
தீவிரமான புயலாக மாறியது பெங்கால் – சிக்கியது தமிழகம்!
இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்கு அருகாக கடந்த மூன்று நாள்களாக நகர்ந்து கொண்டிருந்த பெங்கால் புயல், இன்று நண்பகல் 2.30 மணியளவில் ‘தீவிரமான’ புயல் என்ற நிலையை அடைந்துள்ளது. நாளை அது மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் தமிழகத்தைத் தாக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
சமீபத்தில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மையங்களில் பெங்கால் புயல் வித்தியாசமான அமைப்பையும், கணிக்க முடியாத நகர்வுகளையும் கொண்டிருந்தது. எனினும், நாளை பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ‘தீவிரத்தன்மையுடைய புயல்’ என்ற வகைப்பாட்டுக்குள் வருகின்றது. மணிக்கு 70 கிலோமீற்றர் தொடக்கம் 90 கிலோமீற்றர் வேகத்தில் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக உணரப்படும் – என்றார். (ப)