உலகம்

தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் எலான் மஸ்க்!

Published

on

தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் எலான் மஸ்க்!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும். இதன்மூலம் மக்கள் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று கூறியுள்ளார்.

Advertisement

உலகின் பிரதான நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்குள் குறைக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

அதன்படி டெல்லி-சான்பிரான்சிஸ்கோ 40 நிமிடங்கள், லண்டன்-நியூயார்க் 29 நிமிடங்கள், டோக்கியோ-டெல்லி 30 நிமிடங்கள் என பல நகரங்களுக்கான பயண நேரங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.

தற்போது டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடியாக செல்லும் விமானத்தின் பயண தூரம் 15 மணி நேரம் ஆகும்.

Advertisement

ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட் மூலம் 40 நிமிடங்களில் சென்று விட முடியும். இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் எலான் மஸ்க், “இது இப்போது சாத்தியம்” என பதில் அளித்துள்ளார். (ப)

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version