சினிமா

நயன்தாரா இல்லையென்றால் இந்நேரம் நான் இல்லை.. மனம் திறந்த தம்பி ராமையா

Published

on

நயன்தாரா இல்லையென்றால் இந்நேரம் நான் இல்லை.. மனம் திறந்த தம்பி ராமையா

தமிழ் சினிமாவில் தம்பி ராமையா காமெடி நடிகராக  மட்டுமில்லாமல் குண சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ஒருவராக காணப்படுகின்றார். இவருடைய மகன் சமீபத்தில் பிரபல நடிகர் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.தம்பி ராமையா நிறைய படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்துள்ளார். அவருடைய வாழ்க்கையிலேயே வெளியே சொல்லாத பல சோகங்கள் நிறைந்து இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். அதிலும் தான் தவறான முடிவு எடுத்தபோது நயன்தாரா தான் தன்னை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.அதன்படி மேலும் தெரிய வருகையில், தம்பி ராமையாவுக்கு தன்னுடைய அம்மா என்றால் ரொம்ப பிடிக்குமாம். அது அவருடைய குடும்பத்தில் உள்ள எல்லாருக்குமே தெரியுமாம். தனது தாய் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் தம்பி ராமையா .d_i_aதம்பி  ராமையாவின் தந்தை திமுகவில் மிகப்பெரிய பற்று கொண்டவராம். அவர் கவிதை எழுதுவதில் சிறந்தவராக காணப்படுகின்றார். அவரைப் போல தன்னால் கவிதை எழுத முடியவில்லை என்றாலும் கொஞ்சமாக எழுத முடியும் என்று பல படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளாராம். தன்னுடைய அம்மாவிடம் கூட கவிதைகளை அடிக்கடி எழுதி கொடுத்துள்ளார்.அதில் உன்னுடைய மூச்சுக்காற்று இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் நான் வாழ்ந்தால் போதும் அம்மா.. என்று தான் எப்போதும் எழுதிக் கொடுத்துள்ளார். ஒருநாள் திடீர் என தம்பி ராமையாவின் அம்மா இறந்துள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் அம்மா இல்லை என்றால் நானும் இல்லை என்று நினைத்து பலவாறு யோசனை செய்துள்ளார்.இதன் போது அவருடைய மகளுக்கு மட்டும்தான் கல்யாணம் முடிந்திருந்தது. மகனுக்கு கல்யாணம் ஆகவில்லை. ஆனாலும் தனது குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்து விட்டார்கள் இதனால் நானும் அம்மா போன இடத்திற்கே போய் விட வேண்டும். நான் இறந்ததாக செய்தி வந்தால் கூட அது எனக்கு பெருமை தான் அம்மாவோடு சேர்ந்து இறந்து விட்டார் என்று பெருமையாக இருக்கும்.இதன் போது எப்படியாவது எனது உயிரை மாய்க்க வேண்டும் என்று தம்பி ராமையா யோசித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கத்தில் படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கியது பற்றிம் சிந்தித்து உள்ளார். அந்த சமயத்தில் தான் நயன்தாராவோடு டோரா படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் தம்பி ராமையா. ஒரு நாள் ஷூட்டிங் மட்டுமே நடந்துள்ளது.இதன்போது அவருடைய அம்மாவின் இறப்பு செய்தியை அறிந்த நயன்தாரா போன் பண்ணி பேசி உள்ளார். மனதில் குழப்பமா இருந்த போது நயன்தாரா தனக்கு போன் செய்தது பெரிய திருப்புமுனையாக இருந்தது. அவங்க எதார்த்தத்தை புரிய வச்சாங்க. அதன் பிறகு என்னுடைய தவறான சிந்தனையை மாற்றி விட்டேன் என்று தம்பி ராமையா குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த நேரத்தில் நயன்தாரா போன் பண்ணவில்லை என்றால் நான் இந்நேரம் இல்லை. இதனை எனது மகனின் கல்யாணத்தின் போது நான் உணர்ந்தேன். அம்மா இறந்ததும் நானும் இறந்து இருந்தால் இன்று எனது மகனின் கல்யாணத்தை பார்த்து இருந்திருக்க மாட்டேன் என்று யோசித்தேன் என தம்பி ராமையா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version