பொழுதுபோக்கு

நாயகனாக களம் இறங்கும் சுப்பு சூரியன்: எந்த சீரியலில் தெரியுமா? புதிய அப்டேட்!

Published

on

நாயகனாக களம் இறங்கும் சுப்பு சூரியன்: எந்த சீரியலில் தெரியுமா? புதிய அப்டேட்!

சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற நடிகர் சுப்பு சூரியன் தற்போது புதிய சீரியலில் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சன் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் ரோஜா. டிஆர்பி முன்னணியில் இருந்த இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து, தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. இந்த சீரியலில் முன்னனி கேரக்டரான அர்ஜூன் கேரக்டரில் சுப்பு சூரியன் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.மேலும் அவரது உண்மையான பெயரே மறந்து அனைவரும் இவரை, அர்ஜூன் என்றே அழைக்க தொடங்கினர். அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவாக காரணமாக இருந்த இந்த சீரியல் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அடுத்து விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் நடித்திருந்தார். ஆனால் இந்த சீரியல் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால், விரைவில் முடிக்கப்பட்டது.அதன்பிறகு ஜீ தமிழின் வீரா சீரியலில் 3 தங்கைகளுக்கு அண்ணனாக கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சில எபிசோடுகள் மட்டுமே நடித்திருந்த இவரது கேரக்டர் சீரியலில் சாவது போல் காட்டப்பட்டது. இந்த சீரியலுக்கு பிறகு சுப்பு சூரியன் அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது அவர் ஜீ தமிழில் புதிதாக தொடங்க உள்ள ஒரு சீரியலில் நாயகனாக நடிகக் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.A post shared by Hemalatha V (@tamilserialexpress)தற்போது தெலுங்கில் நின்னு கோரி என்ற சீரியலில் நடித்து வரும் சுப்பு சூரியன் அடுத்து ஜீ தமிழில் தொடங்கும் சீரியல் மூலம் தமிழில் ரீ-என்டரி கொடுக்க உள்ளார். இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சுப்பு சூரியன் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version