உலகம்

நியூசிலாந்து பிரதமரின் கார் விபத்து!

Published

on

நியூசிலாந்து பிரதமரின் கார் விபத்து!

நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸன், அந்நாட்டு நிதியமைச்சர் நிக்கோலா வில்லிஸ் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் வெலிங்டனில் உள்ள விமான நிலையத்திற்கு லிமௌசின் காரில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் பயணித்த கார் பாராளுமன்றம் செல்லும் பிரதான வீதியில் சென்று கொண்டிருந்தபோது, காரின் பின்புறமாக மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இவ்விபத்தின் விளைவாக காரின் பின்புறம் சேதமடைந்துள்ளது. இருப்பினும், காரினுள் பயணித்த பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, தாங்கள் நலமுடன் இருப்பதாக பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஸன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பிரதமர் பயணித்த காரின் பின்புறமாக மோதிய கார் பொலிஸாருக்குரியது என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Advertisement

இந்நிலையில்இவ்விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அரசு வாகனங்களின் கட்டுப்பாட்டை நிர்வகிக்கும் உள்விவகாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version