உலகம்

நைஜீரியாவில் இடிந்து விழுந்த பள்ளிக்கூடம்…22 மாணவர்கள் பலி!

Published

on

நைஜீரியாவில் இடிந்து விழுந்த பள்ளிக்கூடம்…22 மாணவர்கள் பலி!

 

நைஜீரியாவில் பள்ளி இடிந்து விழுந்து 22 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளாட்டூ மாகாணத்தில் புஸா புஜ்ஜி பகுதியில் செயின்ட்ஸ் அகடாமி என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. திடீரென நேற்று இந்த பள்ளி இடிந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 154 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டதாகவும், 132 பேர் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நைஜீரியா தேசிய பேரிடர் மீட்பு படையினர் தகவலை தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஈடுபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு மீட்பு படைத்துறையினருக்கும் தகவலை தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், திடீரென பள்ளி இடிந்து விழுந்ததற்கான காரணம் பற்றிய தகவல் வெளிவரவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக பள்ளிக்கூடம் இடிந்து விழுந்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்ததாக மீட்பு படையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. [எ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version