உலகம்

நைஜீரியா படகு விபத்து: 27 பேர் சாவு; 100-க்கும் அதிகமானோர் மாயம்!

Published

on

நைஜீரியா படகு விபத்து: 27 பேர் சாவு; 100-க்கும் அதிகமானோர் மாயம்!

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கிச் சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர்.

Advertisement

தகவலறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

மீட்பு பணியின்போது 27 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் மாயமாகியுள்ளனர்.

மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version