உலகம்
பலஸ்தினம் தனி நாடா….
பலஸ்தினம் தனி நாடா….
பலஸ்தினம் இறையாண்மை மிக்க ஒரு தனி நாடு என்பதை 146 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதில் 75 வீதமான நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளாகும்.
இந்த ஆண்டு காஷா மீது இஸ்ரேல் ஆரம்பித்த யுத்த நடவடிக்கைகளின் பின்னர் அர்மேனியா, ஸ்லோவேனியா, அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் , பஹாமாஸ். டிரினிடாட் என்ட் டொபேகோ , ஜெமெய்கா மற்றும் பார்படோஸ் ஆகிய 9 நாடுகள் பலஸ்தினத்தை இறையாண்மை மிக்க தனி நாடாக உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன.
பலஸ்தினம் தனி நாடு என்பதற்கு சர்வதேச ரீதியில் கிடைத்த ஒத்துழைப்பாக இந்த அங்கீகாரம் பார்க்கப்பட்டது. பலஸ்தின மக்களுடனான சர்வதேச ஒருமைப்பாட்டுக்கான தினமாக இன்றைய நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
1977ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த தினம் ஸ்தாபிக்கப்பட்டது. பலஸ்தினத்திற்கான உரிமை , சுய நிர்ணயம், சுதந்திரம் மற்றும் பலஸ்தின அகதிகள் விடயத்தில் நியாயமான தீர்வு என்பவற்றை உலகளாவிய ரீதியிலான ஒத்துழைப்பை வலியுறுத்தும் வகையில் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
பலஸ்தினத்தை அங்கீகரிப்பது அதன் உலகளாவிய ரீதியிலான நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. நடைமுறையில் 146 நாடுகள் பலஸ்தினத்தை ஒரு தனி அரசு என அங்கீகரித்துள்ளன.
வத்திகானிலுள்ள கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட சில அமைப்புகளும் பலஸ்தினத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.