உலகம்
பிரித்தானியாவில் அதிகரித்த வரி
பிரித்தானியாவில் அதிகரித்த வரி
பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரஷெல் ரீவ்ஸ் நேற்றைய தினம் தனது முதலாவது வரவு செலவு திட்ட யோசனையை முன்வைத்திருந்தார்.
30 வருடங்களின் பின்னர் பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அதிகரித்த வரி திட்டங்கள் இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வரவு செலவு திட்டத்தை முன்வைத்த ரஷெல் ரீவ்ஸ் கன்சர்வேடிவ் ஆட்சி நிர்வாகம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அரச சேவை வீழ்ச்சியடைந்தமைக்கு கடந்த நிர்வாகமே காரணமென அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வருடாந்தம் 40 பில்லியன் பவுணினால் வரி அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.