இந்தியா

புயல், கனமழையை எதிர்கொள்ள தயாராகும் திமுக, அதிமுக.. போட்டிப்போட்டு குழுக்கள் அமைப்பு

Published

on

புயல், கனமழையை எதிர்கொள்ள தயாராகும் திமுக, அதிமுக.. போட்டிப்போட்டு குழுக்கள் அமைப்பு

Advertisement

இதனிடையே, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முழு வேகத்தில் செயல்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில், திமுக தலைமைக் கழகத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், உதவிகள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் என, திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள், வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. மக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement

மழைநீர் வடிகால் பணிகள் என திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை. எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக ஐடி விங் சார்பில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம், அதாவது அவசரகால தொடர்பு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை வாழ் பெருமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை அதிமுக தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version