உலகம்

பைடனின் பதவிக் கால இறுதிக்குள் காஸா போர் முற்றுப்பெறும்

Published

on

பைடனின் பதவிக் கால இறுதிக்குள் காஸா போர் முற்றுப்பெறும்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முடிவடைவதற்குள், காஸாவில் போர் நிறுத்தப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்​துக்​கும் பலஸ்​தீனத்​தின் காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் தீவிர​வா​தி​களுக்​கும் கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காஸாவில் இதுவரை 44 ஆயிரத்து 282 பேர் உயிரிழந்​துள்ளனர். ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் படுகாயம் அடைந்​துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்​தின் ​பேரில் இஸ்ரேல் – காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்​தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது. இது தொடர்பாக எகிப்து அரசின் உயர்​நிலைக் குழு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று முக்கிய பேச்சு​வார்த்​தை நடத்​தி​யது.

Advertisement

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7-ம் திகதி ஹமாஸ் தீவிர​வா​திகள் இஸ்ரேலில் நடத்திய தாக்​குதலில் 254 இஸ்ரேலியர்கள் பிணைக் கை​திகளாக பிடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் 154 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்ன​மும் 100 பேர் ஹமாஸ் தீவிர​வா​திகளின் பிடி​யில் உள்ளனர். அவர்களை விடுவிக்க, இஸ்ரேல் சிறை​களில் உள்ள 1,000 ஹமாஸ் தீவிர​வா​திகளை விடுதலை செய்ய வேண்​டும் என்று கோரப்​பட்டுள்ளது.

இவை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு​வார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து ஹமாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கையில், “லெபனான் உடன் எந்த நிபந்​தனை​யும் இன்றி இஸ்ரேல் அரசு போர் நிறுத்த ஒப்பந்​தம் மேற்​கொண்​டிருக்​கிறது. காஸா​விலும் போர் நிறுத்​தத்தை அமுல்​படுத்த விரும்​பு​கிறோம். ஆனால், இஸ்ரேல் அரசு போர் நிறுத்​தத்தை விரும்ப​வில்லை” என்றன.

இது குறித்து அமெரிக்க அரசு வட்​டாரங்​கள் தெரிவிக்கையில்,

Advertisement

 “தற்​போதைய அமெரிக்க அ​திபர் ஜோ பைடனின் பதவிக் ​காலம் வரும் ஜனவரி​யில் முடிவடைகிறது. அதற்குள் ​காஸா​வில் ​போர் நிறுத்​தம் அமுலாகும். இது தொடர்​பாக இஸ்​ரேல்​ அரசு – ​காஸா நிர்​வாகம்​ இடையே ​விரை​வில்​ ஒப்​பந்​தம்​ கையெழுத்​தாகும்​” என்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version