சினிமா

ரஜினி, கமல் எல்லாம் இல்ல.. இந்தியாவுல இந்த நடிகைதான் டாப், RJ பாலாஜி ஓபன் டாக்

Published

on

ரஜினி, கமல் எல்லாம் இல்ல.. இந்தியாவுல இந்த நடிகைதான் டாப், RJ பாலாஜி ஓபன் டாக்

தீயா வேலை செய்யனும் படம் மூலம் சினிமாவில் எண்ட்ரி ஆன ஆர்.ஜே.பாலாஜி அடுத்து, எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்டுல விஷேசம் உள்ளிட்ட படங்கள் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், சித்தார்த் விஸ்வ நாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சொர்க்க வாசல். இப்பட்த்தில் செல்வராகவன், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், ரவி ராகவேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படத்துக்கு இளவரசன் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். நவம்பர் 29 ஆம் தேதி, நேற்று உலகம் முழுவதும் இப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்பட புரமோசனின் படக்குழு ஈடுபட்டு வரும் நிலையில், ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் பேட்டியளித்தார். அதில், இந்திய அளவில் சிறந்த நடிகர் என்றால் அது ரஜினி, கமல், மோகன் லால், மம்முட்டி, அமிதாப்பச்சன் ஆகியோர் என பலரும் சுட்டிக்காட்டுவர். அனால், ஆண், பெண் நடிகர்கள் என லிஸ்ட் எடுத்தால், இந்திய அளவில் டாப் 3 -ல் நடிகை ஊர்வசிதான் இருப்பார் என்று கூறியுள்ளார்.

அதாவது, ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய வீட்டுல விஷேசம் என்ற படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதில் சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில், 50வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண் வேடத்தில் ஊர்வசி சூப்பராக நடித்து, பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார். எனவே அதைக் குறிப்பிட்டுத்தான் ஆர்.ஜே.பாலாஜி ஊர்வசி சிறந்த நடிகை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், சொர்க்க வாசல் படத்தை அடுத்து, ஆர்.ஜே. பாலாஜி சூர்யா 45 படத்தை இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் 45 நாட்கள் நடக்கும் நிலையில் நேற்று மாசாணியம்மன் கோயில் சாமி கும்பிட்ட படக்குழுனர், பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினர். இதன் புகைப்படங்களும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version