உலகம்
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் நியமனம்
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் நியமனம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்து வருகின்ற நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது பெண்ணை நியமனம் செய்துள்ளார். இவர் டிரம்பின் பிரசார உதவியாளராக பணியாற்றி இருந்தார்.
இது குறித்து டிரம்ப் கூறும்போது, கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம் என்ற செய்தியை மக்களுக்கு வழங்க உதவுவார் என்றார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் இளம் வயது நபர் கரோலின் லீவிட் என்பதுடன், இதற்கு முன்பு 1969 ஆம் ஆண்டு 29 வயதான ரான் ஜீக்லர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.