சினிமா

15 ஆண்டு ரகசிய காதலருடன் கீர்த்தி சுரேஷ் திருமணம்!! எங்கு, எப்போது தெரியுமா..

Published

on

15 ஆண்டு ரகசிய காதலருடன் கீர்த்தி சுரேஷ் திருமணம்!! எங்கு, எப்போது தெரியுமா..

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுடன் பேபி ஜான் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.தற்போது கீர்த்தி சுரேஷ் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ள பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அப்பாடலில் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமரில் ஆட்டம் போட்டுள்ளார் கீர்த்தி.நடிகை கீர்த்தி சுரேஷ் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஆண் நண்பரை தான் திருமணம் செய்யவுள்ளார் என்றும் 15 ஆண்டுகளாக அந்தோனி தட்டில் என்ற ஆண் நண்பவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் டிசம்பர் மாதம் திருமணம் என்றும் கூறப்பட்டுள்ளது.சமீபத்தில் தன்னுடைய காதல் திருமணத்தை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்த நிலையில் குடும்பத்தினருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் கீர்த்தி சுரேஷ். அங்கு பத்திரிக்கையாளர்கள் அவரிடம் எங்கு திருமணம் என்ற கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கு கீர்த்தி, நீண்டநாட்களுக்கு பின் ஏழுமலையானை வழிப்பட்டது மனதிற்கு இதமாக இருக்கிறது. அடுத்த மாதம் எனக்கு திருமணம், திருமணம் கோவாவில் நடைபெறும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version